நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதின் குற்றச்சாட்டுகளை MCMC இன்னும் விசாரித்து வருகிறது: டிக் டாக்கின் தகவலுக்காகக் காத்திருக்கிறது

சைபர்ஜெயா:

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசிம் குற்றச்சாட்டுகளை எம்சிஎம்சி இன்னும் விசாரித்து வருகிறது.

டிக் டாக்கின் தகவலுக்காகக் காத்திருக்கிறது  என்று அவ்வாணையம் ஓர் அறிக்கையில் கூறியது.

எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுக்கு ரோன் 95 மானிய விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை இன்னும் விசாரித்து வருகிறது.

மேலும் சமூக ஊடக தள வழங்குநருடன் இணைந்து டிக் டாக்கில் வைரலாகும் உள்ளடக்கம் குறித்த ஆரம்ப மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், விசாரணையை முடிக்க டிக் டோக்கிலிருந்து கூடுதல் தகவலுக்காக எம்சிஎம்சி இன்னும் காத்திருக்கிறது.

இன்றுவரை, பெறப்பட்ட விசாரணை முடிவுகள் மேலதிக விசாரணை, அறிவுறுத்தல்களுக்காக துணை அரசு வழக்கறிஞருக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

விசாரணை முழு நேர்மையுடனும், தற்போதுள்ள சட்ட விதிகளின்படியும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய எம்சிஎம்சி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset