நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பை நீதிமன்றத்தில் சந்தித்த மஇகா தலைவர்கள் தேமுவில் இருந்து வெளியேறுகிறோம் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கோலாலம்பூர்:

நஜிப்பை நீதிமன்றத்தில் சந்தித்த மஇகா தலைவர்கள் தேமுவில் இருந்து வெளியேறுகிறோம் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை மலேசிய கினி ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நேற்று கோலாலம்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை மஇகாவின் தேசிய தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா தலைவர்கள் சந்தித்தனர்.

அச்சந்திப்பில் மஇகா தேசிய முன்னணியை விட்டு வெளியேறத் தயாராக உள்ளது என அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் மஇகா தலைமை நஜிப்பை சந்தித்து கட்சியின் திட்டத்தையும் நகர்வையும் அவருக்குத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எளிமையாகச் சொன்னால், மஇகா நஜிப்பைச் சந்தித்து தேசிய முன்னணி விட்டு விடை பெறுகிறோம் என கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், மஇகாவுக்கு நஜிப் அளித்த பதில் என்ன என்பதை அந்த வட்டாரம் வெளியிடவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படும் இந்தக் கூட்டத்தில், டான்ஸ்ரீ விக்னேஸ்வரனைத் தவிர,

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர் எம்.அசோஜன், பொதுச் செயலாளர் டத்தோ எஸ்.அனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான வீடியோ பதிவுகளும் சமூக ஊடங்களில் வைரலாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset