நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா கைரினாவின் மரணத்திற்கு எச்ஐஇ சிக்கல்களுடன் கூடிய கடுமையான மூளைக் காயமே காரணம்: டாக்டர் பவன்குமார்

கோத்தா கினபாலு:

ஷாரா கைரினாவின் மரணத்திற்கு எச்ஐஇ சிக்கல்களுடன் கூடிய கடுமையான  மூளைக் காயமே காரணம்.

குயின் எலிசபெத் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் மருத்துவர் டாக்டர் பவன்குமார் பாலச்சந்திரன் இதனை கூறினார்.

ஜாரா கைரினா மகாதீரின் மரணத்திற்கு ஹைபோக்சிக் - இஸ்கிமிக் என்செபலோபதி (எச்ஐஇ) அல்லது மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை (ஹைபோக்ஸியா), இரத்த ஓட்டம் (இஸ்கெமியா) காரணமாக ஏற்படும் மூளைக் காயம் போன்ற சிக்கல்களுடன் கூடிய கடுமையான மூளைக் காயமே முக்கிய காரணம்.

ஷாரா கைரினாவின் மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் நான்காவது சாட்சியாக இன்று இங்குள்ள மரண விசாரணை நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் வாசிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

அவரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவருக்கு மூளையில் கடுமையான இரத்தப்போக்கு இருப்பதும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மூளையில் எந்த செயல்பாடுகளும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஜாரா கைரினாவின் உடல்நிலை மோசமடைந்ததது.

சிறப்பு மருத்துவக் குழுவின் இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ஜூலை 17 அன்று மதியம் 1.07 மணியளவில் அவர் இறந்து விட்டார்.

அவரின் மரணம் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணை அதிகாரி வரும் வரை உடல் வார்டில் வைக்கப்பட்டது.

 துணைத் தலைமை அரசு வழக்கறிஞர் டத்தோ பதியுஸ்ஸாமான் அகமதுவின் சாட்சி அறிக்கையைப் படிக்கக் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset