நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜெருசலமில் பஸ் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, 15 பேர் காயம்

ஜெருசலம்:

ஜெருசலமில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானார்கள். 

ஜெருசலேமில் அமைந்துள்ள இஸ்ரேல் குடியிருப்புக்களுக்கு செல்லும் சாலையில், வடக்கு நுழைவாயிலில் நேற்று காலை பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள், அங்கிருந்த பேருந்து மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 

பாலஸ்தீனியர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். மேலும் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். 

மேலும் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்த ஒரு வீரர் உட்பட இரண்டு பேர் தாக்குதல் நடத்தியவர்களை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடந்த இரண்டு மணி நேரத்துக்கு பின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்திற்கு வந்தார்.

துப்பாக்கி சூட்டை அடுத்து நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். இஸ்ரேல் மக்கள் பதற்ற்மடைந்து அங்கும் இங்கும் சிதறி ஓடியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset