நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தேர்தல் தோல்வியின் எதிரொலி: ஜப்பான் பிரதமர் பதவி விலகல்

தோக்கியோ -

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக சொந்தக் கட்சியினர் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகினார்.

கிழக்காசிய நாடான ஜப்பானில், கடந்த ஆண்டு அக்டோபரில் எல்.டி.பி. எனும் லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஷிகெரு இஷிபா ஏற்றுக் கொண்டார். 

அதன் பின், 2024 அக்டோபரில் நடந்த பார்லிமென்டின் கீழ்சபை தேர்தல் மற்றும் இந்தாண்டு ஜூலையில் நடந்த மேல்சபை தேர்தல் இரண்டிலும் அக்கட்சி தன் பெரும்பான்மையை இழந்தது.

இத்தோல்விகளைத் தொடர்ந்து, எல்.டி.பி. கட்சிக்குள் இஷிபா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில், கட்சிக்குள் பிளவு ஏற்படுவதை தடுக்கும் விதமாக இஷிபா தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.

இதையடுத்து அந்நாட்டு வேளாண் அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, முன்னாள் பிரதமரான யோஷிஹிடே சுகா ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்கு பின், ஷிகெரு இஷிபா தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset