செய்திகள் உலகம்
கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 3.5 பில்லியன் டாலர் அபராதம்: ட்ரம்ப் கடும் கண்டனம்
வாஷிங்டன்: ..
கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 3.5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமானகூகுள் வர்த்தக போட்டிக்கான சட்டங் களை மீறி செயல்பட்டதாக கூறி அந்த நிறுவனத்துக்கு 3.5 பில் லியன் டாலர் அபராதத்தை ஐரோப் பிய யூனியன் விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளத்தில் கூறியுள்ளதாவது: ஐரோப்பா இன்று அமெரிக்காவின் மற்றொரு மிகச்சிறந்த நிறு வனமான கூகுளுக்கு 3.5 பில் லியன் டாலர் அபராதம் விதித்து அதன் மீது தாக்குதல் நடத்தியுள் ளது. இது மிகவும் நியாயமற்றது. அமெரிக்காவில் வரி செலுத்து வோர் ஒவ்வொருவரும் ஐரோப் பிய யூனியனின் இந்த நடவடிக் கையை ஆதரிக்க மாட்டார்கள். எனது நிர்வாகம் முன்பு கூறியது போல இதுபோன்ற பாரபட்சமான செயல்களை நிலைநிறுத்த ஒரு போதும் அனுமதிக்காது. இந்த அபராதத்தை திரும்பப் பெறா விட்டால் வரிகள் மூலம் பதிலடி தரப்படும்.
இதேபோன்றதான் ஆப்பிள் நிறுவனமும் 17 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்னைப் பொருத்தவரை அந்த அபராதம் வசூலிக்கப்படக் கூடாதது. அவர் கள் தங்களது பணத்தைத் திரும் பப் பெற இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனை நாம் அனுமதிக்கமுடியாது.
அப்படி நடந்தால், வரி செலுத்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்ய பிரிவு 301 நடவடிக்கையைத் தொடங்கவேண்டிய கட்டாயத் துக்கு தள்ளப்படுவேன்.இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
