நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யூஎம்எஸ் பல்கலைக்கழகத்தில் குழாய் பொருத்தும் பணியின் போது புதையுண்ட ஆடவர் மரணம்

கோத்தா கினபாலு:

யூஎம்எஸ் பல்கலைக்கழகத்தில் குழாய் பொருத்தும் பணியின் போது புதையுண்டதாக நம்பப்படும் ஆடவர் மரணமடைந்தார்.

சபா தீயணைப்பு, மீட்பு நடவடிக்கை குழு இதனை உறுதிப்படுத்தியது.

மலேசியா சபா பல்கலைக்கழகத்தில் பகுதியில் குழாய்களைத் தோண்டி சீரமைக்கும் பணிகள் நடந்தது.

அப்போது புதைக்கப்பட்ட ஒரு நபர் இறந்தார்.

22 வயதான பாதிக்கப்பட்டவர் மூன்று மீட்டர் ஆழ நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

அவர் சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரிகளால் அந்த நபர் இறந்துவிட்டதாக அக்குழு உறுதிப்படுத்தியது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தரையைத் தோண்டி, பாதிக்கப்பட்டவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்தது.

அதன் பின்னர் மேலதிக நடவடிக்கைக்காக அவரின் உடல் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset