நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து தலைவரான என்னை நீக்க சதி நடக்கிறது: டான்ஸ்ரீ மொஹைதின் குற்றச்சாட்டு

ஷாஆலம்:

பெர்சத்து தலைவரான என்னை தலைமைப் பதவியில் இருந்து நீக்க சதி நடக்கிறது என்று டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்காக கட்சியில் உள்ள சில தரப்பினர் கையெழுத்து சேகரிக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கையை  கண்டிக்கத்தக்கது.  இது கட்சி கட்சி விதிமுறைகளுக்கு முரணானது.

அனைத்து உறுப்பினர்களும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தலைவரை வீழ்த்த முடிந்தால், இந்த மேடையில் உள்ள அனைத்து தலைவர்களையும் அதே வழிமுறைகள் மூலம் வீழ்த்த முடியும்.

நினைவில் கொள்ளுங்கள், பெர்சத்து கட்சிக்கு என அதன் சட்ட விதிகள் உள்ளது. 

நமது கட்சி ஒழுங்காகவும், நல்லதாகவும், இணக்கமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமென்றால் கட்சியின் சட்ட விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஷாஆலமில் நடந்த பெர்சத்து ஆண்டு பொதுக் கூட்டத்தில்  பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset