
செய்திகள் மலேசியா
நான் மன்னிக்கும் குணம் கொண்டவன்: பிரதமரை சாடிய மொஹைதின்
ஷாஆலாம்:
நான் மன்னிக்கும் குணம் கொண்டவன் என்று பிரதமரை பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் சாடினார்.
வெளிநாட்டவர்களுக்கு ரோன் 95 மானியங்களை வழங்குவதை ஆதரித்ததாக அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்னும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை.
அன்வார் குற்றம் சாட்டியபடி தனது அறிக்கை குறித்த ஊடக அறிக்கைகள் குறித்து எம்சிஎம்சியிடம் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் எனக்கு கிடைக்கவில்லை.
இருப்பினும் நான் மன்னிக்கும் குணம் கொண்டவன். பிரதமர் அவ்வாறு செய்ய மறுத்தால் ஏற்றுக் கொள்வதாகவும் நான் தயார்.
அன்று அவர் என்னையும் அவதூறாகப் பேசினார்.
வெளிநாட்டவர்களுக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதை நான் ஆதரித்ததாகவும் இதற்காக நான் விசாரணைக்கு உட்படுத்தபடுவேன் எனவும் அவர் கூறினார்.
இதுவரை எனக்கு எந்த புகாரும் வரவில்லை. அன்வாரும் இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை.
சம்பந்தப்பட்டவரை மன்னிப்பது எனக்குப் பரவாயில்லை.
ஆனால் இன்று வரை அவர் தொடர்ந்து அதனைப் பேசி வருகிறார். தான் தவறாகப் பேசுவது குறித்து அவர் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை.
இது போன்றவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை அகராதியில் மன்னிப்பு என்பதே இல்லை என்று தெரிகிறது.
ஷாஆலமில் நடந்த பெர்சத்து ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2025, 9:57 pm
டான்ஸ்ரீ மொஹைதினை 11ஆவது பிரதமராகப் பெயரிட்டு பெர்சத்து கட்சி தீர்மானம் நிறைவேற்றியது
September 7, 2025, 9:22 pm
நான் இறக்கும் வரை பெர்சத்து தான் எனது கடைசி கட்சி: ஹம்சா
September 7, 2025, 7:25 pm
சாரா 100 ரிங்கிட் உதவித் தொகை என்பது ஒரு தீர்வல்ல: பிரதமர்
September 7, 2025, 7:24 pm
முக்கிய ஊழல் வழக்கின் விவரங்களை எம்ஏசிசி செவ்வாய்க்கிழமை அறிவிக்கும்: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
September 7, 2025, 6:06 pm
காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த மீலாது விழாவில் 800 பேர் கலந்து கொண்டனர்: டத்தோ அப்துல் ஹமித்
September 7, 2025, 3:24 pm
முஹம்மத் ஹசானின் அறிவுரையை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று எனக்கு தெரியவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
September 7, 2025, 2:02 pm