நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புதிய அரசாங்கம் அமைத்து தாய்லந்துப் பிரதமர் ஆகிறார் அனுட்டின் சார்ன்விராகூல் 

பேங்காக்:

தாய்லந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுட்டின் சார்ன்விராகூல் (Anutin Charnvirakul) புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயாராகி வருகிறார்.

நேற்று நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 490 பேர். அவர்களில் 311 பேர்  அனுட்டினுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எதிர்த்து நின்ற Pheu Thai கட்சியின் சாய்காசெம் நிதிசிரிக்கு (Chaikasem Nitisiri) 152 வாக்குகள் கிடைத்தன. 27 பேர் வாக்களிக்கவில்லை.

அமைச்சரவைப் பொறுப்புகள் குறித்துத்  அனுட்டி சார்ன்விராகூல் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக Bangkok Post தெரிவித்துள்ளது.

மன்னரின் அதிகாரபூர்வ ஒப்புதல் கிடைத்ததும் அனுட்டின் புதிய அரசாங்கத்தை அமைப்பார் என்று கூறப்படுகிறது.

ஆதாரம்: Bangkok Post 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset