நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் அப்துல்லாஹ் கெடா மாநில தொக்கோ மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்  

அலோர் ஸ்டார்:

இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் இஸ்லாம் அப்துல்லாஹ், கெடா மாநில அளவில் தொக்கோ சிறப்பு மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்.

இரண்டு உடன்பிறப்புகளில் மூத்தவராக சுங்கை பட்டாணியில் பிறந்த இவர் 1985 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி அவர் இஸ்லாத்தைத் தழுவினார். மார்க்கத்தை முழுமையாக கற்று தேர்ந்தார். ஜோர்டானுக்கு சென்று அங்குள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அவர் ஷரியா, இஸ்லாமிய வரலாறு, ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றார். கூலிம் நகரில் எளிய தோட்டத்தில் பிறந்த ஆறுமுகன் தங்கவேலு  இஸ்லாத்தைத் தழுவி முஹம்மத் நயீம் இஸ்லாம் அப்துல்லாஹ் ஆனார்.

தற்போது, ​​அவர் 2018 முதல் கெடா மாநில ஜகாத் வாரியத்தில் மார்க்க அழைப்பியல், மேம்பாட்டுப் பிரிவில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

May be an image of 7 people

“அல்ஹம்துலில்லாஹ், இந்த விருதைப் பெற எனக்கு அனுமதி அளித்த அல்லாஹ்வுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இஸ்லாத்தை எடுத்துரைக்கும் அழைப்பு பணியையும் தர்பியா எனும் வழிகாட்டுதல் பணியையும் செய்ய எனக்கு வழங்கப்பட்ட நம்பிக்கைக்காக கெடா மாநில ஜகாத் வாரியம், கெடா மாநில இஸ்லாமிய சமய விவகாரத்  துறை, கெடா மாநில முஃப்தி துறைக்கும் நான் நன்றி கூறுகிறேன்,” என்று இன்று 1447 ஹிஜ்ரா ஆண்டிற்கான கெடா தாருல் அமான் மாநில அளவிலான மௌலிதூர் ரசூல் கொண்டாட்ட விழாவில் சந்தித்தபோது அவர் கூறினார்.

அழைப்பியல் (தக்வா) துறையில் தனது ஈடுபாடு முழுவதும், உஸ்தாஸ் முகமது நயீம் இஸ்லாம் பல்வேறு அமைப்புகள், நலத்திட்டங்களுக்கு தலைமை தாங்கி பங்கேற்றுள்ளார்.

அவர்களில், மலேசியாவில் உள்ள புதிய இந்திய இனவழி  சகோதரர்களின் இஸ்லாமிய பிரச்சாரம், நலனுக்கான சங்கத்தின் (அல்-ஹிதாயா) இயக்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

2009 ஆம் ஆண்டில் கெடா மாநில இஸ்லாமிய மத கவுன்சிலிடமிருந்து சிறந்த சேவை விருது மற்றும் 2011 ஆம் ஆண்டில் சவுதி அரேபிய அரசாங்கத்தின் மூலம் மன்னர் அப்துல்லாஹ்வால் மெக்காவில் ஹஜ் செய்ததற்காக ஸ்பான்சர்ஷிப் பரிசு உட்பட பல அங்கீகாரங்களையும் அவர் பெற்றுள்ளார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset