நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயுதங்களை கடத்த முயன்றதற்காக ஆடவர் கைது; போலிஸ் விசாரணைகளை நடத்துகிறது: சைபுடின்

பாலிங்:

ஆயுதங்களை கடத்த முயன்றதற்காக ஆடவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை போலிஸ் விசாரித்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

தாய்லாந்தில் துப்பாக்கி கடத்தியதற்காக மலேசியர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவர்  குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்களா அல்லது வெறுமனே  போக்குவரத்துக்காக செயல்படுத்தப்பட்டாரா என்பதை போலிஸ் முழுமையாக விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக தனது அமைச்சுக்கு போலிசாரிடம் இருந்து  முழு விளக்கம் கிடைத்தது.

மேலும் இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பின் விளைவாக தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset