நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணி, மஇகா, மசீச கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன: அஸ்மின்

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணி, மஇகா, மசீச கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன.

தேசிய கூட்டணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இதனை கூறினார்.

டான்ஸ்ரீ மொஹைதின்யாசின் தலைமையிலான முந்தைய தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளை மஇகா, மசீச கட்சிகள் நியாயமானதாக கருதுகின்றன.

மேலும் இந்த நாட்டில் உள்ள அனைத்து மட்ட சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அக்கட்சிகள்  அங்கீகரித்தன.

ஆம், அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புகள்,  விவாதங்கள் நடந்தன.

காரணம் அவர்கள் எங்கள் நண்பர்கள் என்று அவர் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அக்கட்சிகள் தேசியக் கூட்டணியிம் சேர வழிவகுக்கும் என்று கேட்டபோது,   

அத்தகைய முடிவுக்கு அவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியாது என்று டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset