நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் அடிமை விலங்கொடித்த அண்ணல் நபி (ஸல்) ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது 

கோலாலம்பூர்:

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  மீலாதுன் நபி சிறப்பு நிகழ்ச்சிகளை இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும்விதமாக  அவரது நபிமொழிகள், வழிகாட்டுதல்கள், புகழ்மாலைகள், சொற்பொழிவுகள் என்று பலவிதமாக மக்கள் நினைவுகூர்வார்கள் 

இது நபிகள் நாயகத்தின் மீதுள்ள அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மாதமாகும்.

முஸ்லிம்கள் பெருமானார் பிறந்த நாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூர்ந்து, ஒழுக்கங்களையும் உண்மையான வாழ்வையும் பின்பற்றுவதன் மூலம் அவரது பிறந்த நாளைக் அமைதியான முறையில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

அந்த வகையில் மலேசிய முஸ்லிம் இளைஞர் மன்றம் (MMYC) ஏற்பாட்டில் இன்று மீலாதுன் நபி ஊர்வலம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. ஏறக்குறைய 3000 பேர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடந்து வந்தார்கள்.

May be an image of 8 people and text

இன்று செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 2.00 மணிக்கு மேல் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் மீலாதுன் நபி ஊர்வலம் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் தொடங்கி நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.

ஜாலன் மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி துன் பேராக், லெபோ அம்பாங், டாங்க் வாங்கி வழியாக மீண்டும் மஸ்ஜித் இந்தியாவை ஊர்வலம் வந்தடைந்தது.

May be an image of 2 people, crowd and text

காவல் துறையின் அனுமதியோடு இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புக்கள் ஆதரவோடு இந்த ஊர்வலம் மிகவும் சிறப்பாக ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது என்று எம்.எம்.ஒய்.சி.அமைப்பின் ஆலோசகர் அஸ்ரின் கூறினார்.

மலேசிய இந்திய முஸ்லிம் பெருமக்கள், உஸ்தாத்மார்கள், மார்க்க போதகர்கள், அணி திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த இந்த ஊர்வலத்தில் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.

மஸ்ஜித்கள், மதரஸாக்களின் நிர்வாகிகள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு வழி நெடுக நபி புகழ்பாடினர்.

May be an image of 6 people, headscarf, dais and text that says "MALABAR M ERASENEF MALAE R YaAllahu! FRahmanu.!! YRahim!! QADR FOUNDATION FOUN ATION Salam aulidur Rasul"

எம் எம் ஒய் சி ஏற்பாட்டில் நடைபெற்ற ஊரவலத்திற்கு பெர்மிம் பேரவை, பெரஸ்மா, கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய விவகாரத் துறை, முக்மின் அமைப்பு, டி பி கே எல், காவல்துறை ஆகியோர் பக்க பலமாய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset