நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரெய்லர் லோரியை மோதி கார் விபத்துக்குள்ளானது: 5 மாணவர்கள் மரணம்

துவாரான்:

டிரெய்லர் லோரியை மோதி கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 மாணவர்கள் மரணமடைந்தனர்.

துவாரனில் உள்ள மலேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனப் பயிற்சி மையத்திற்கு முன்னால் உள்ள ஜாலான் சுலமான் கயாங்கில் இன்று பிற்பகலில் இந்த விபத்து நடந்தது.

இந்த விபத்தில் கார் டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

பிற்பகல் 2.09 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில், 

20 வயதுடைய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

மேலும் அவர்களின் உடல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் லோரி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset