நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓரங்கட்டப்படும் அரசியலில் மஇகா இனி அமைதியாக இருக்க முடியாது: சிவசுப்பிரமணியம் வலியுறுத்து

கோலாலம்பூர்:

ஓரங்கட்டப்படும் அரசியல் சூழ்நிலையில் மஇகா இனி அமைதியாக இருக்க முடியாது.

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் இதனை வலியுறுத்தினார்.

தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக மஇகா நீண்ட காலமாக உறுதியாக இருந்து வருகிறது.

ஆனால் இன்று நமது குரல்களையும் மலேசிய இந்திய சமூகத்தின் குரல்களையும் மேலும் ஓரங்கட்டும் அரசியலில் நாம் இனி அமைதியாக இருக்க முடியாது.

இதனால் தேசிய முன்னணியில் மஇகா உடனடி, உறுதியான சீர்திருத்தங்களைக் கோருகிறது.

ஒரு  அரசியல் அடையாளமாக மட்டுமல்லாமல், இனம்,  நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உரிமையை மஇகா கோருகிறது.

தேசிய முன்னணி நமது உண்மையான செல்வாக்கை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் ஒரு பதவி அல்லது  மக்களின் குரல்களைக் குரல் கொடுக்கும் வாய்ப்பை வழங்க விரும்பவில்லை என்றால் மஇகா ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.

தேசிய முன்னணியை விட்டு வெளியேறி, நமது கோரிக்கைகளை மதிக்கும் மற்றொரு பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

வெற்று வாக்குறுதிகளுக்காக நாம் இனி காத்திருக்கவோ அல்லது உண்மையான அதிகாரம் இல்லாமல் ஓரங்கட்டப்படவோ முடியாது.

தேசிய முன்னணியுடன் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் முடிந்துவிட்டது.

இது ஒரு வெற்று அச்சுறுத்தல் அல்ல, மாறாக நமது பொறுமைக்கும் எல்லைகள் உண்டு என்பதற்கான தெளிவான எச்சரிக்கை இதுவாகும்.

மஇகாவின் உயர்மட்டத் தலைமைக்கு மக்கள் நலனை பாதுகாக்க மஇகாவுக்கு அதிகாரத்தையும் வாய்ப்பையும் வழங்க வேண்டும்.

தேசிய முன்னணி தலைமை இந்தக் கோரிக்கையைப் பற்றி அலட்சியமாக இருந்தால், ஆண்டு பொதுக் கூட்டத்தில் மஇகா உரிய முடிவை எடுக்கும்.

இந்த முடிவு இறுதியானதாக இருக்கும் என்று சிவசுப்பிரமணியம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset