நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மசீசவுக்காக காத்திருக்காமல் மஇகா சொந்த முடிவை எடுக்கும்: டத்தோ ஆனந்தன்

கோலாலம்பூர்:

மசீசவுக்காக  காத்திருக்காமல்  மஇகா அதன் சொந்த முடிவை விரைந்து எடுக்கும்.

மஇகாவின் தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன் இதனை கூறினார்.

மஇகா எடுக்கும் எந்தவொரு முடிவும் கட்சி,  இந்திய சமூகத்தின் நலனுக்காகவே இருக்கும்,

இதனால் மஇகா, மசீசவுக்கு காத்திருக்கவோ அல்லது  கேட்கவோ தேவையில்லை.

தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக இருந்தாலும் மஇகா அதன் திசையையும் நிலைப்பாட்டையும் தீர்மானிக்க முழு அதிகாரத்தை கொண்டுள்ளது.

மஇகா ஒரு முதிர்ந்த கட்சி. முடிவுகளை எடுக்க சுதந்திரமாக உள்ளது.

எங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை அல்லது மஇகாவுடன் இணைந்து முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை.

இந்திய சமூகம் மற்றும் ஒட்டுமொத்த மலேசியர்களின் நலனுக்காக மஇகா தலைமையால் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset