செய்திகள் உலகம்
நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப் வலைதளங்களுக்கு தடை
காத்மாண்டு:
நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு.
நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்த கெடு முடிந்த நிலையில் 4-ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போது எக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
பேச்சுரிமைக்கு தடை:
நேபாள அரசின் சமூக வலைதள தடைக்கு பேச்சுரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரலை ஒடுக்கும் நடவடிக்கை இது என்று அவர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க தவறியதற்கு அரசின் கடுமையான நிபந்தனைகள் கூட காரணமாக இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ம் ஆண்டு மே மாதம் இந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 239 ஆண்டுகளாக இருந்து வந்த மன்னராட்சியை அகற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்துக்கு அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் 16,000 பேர் உயிரிழந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
