நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நைஜீரியா படகு விபத்தில் 90 பேர் உயிரிழப்பு

அபுஜா:

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 60 பேர் பரிதாபமாக பலியாகினர்.
நைஜீரியாவில் படகு போக்குவரத்து தான் முக்கியத்துவமாக வாய்ந்ததாக இருக்கிறது.  வட-மத்திய நைஜர் மாநிலத்தில் மலாலே மாவட்டத்தில் உள்ள துங்கன் சுலேவிலிருந்து துக்காவுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பயணிகள் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பலரை தேடி வருகின்றனர்.

படகு அதிக சுமையுடன் இருந்ததால், மரத்தின் அடிப்பகுதியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset