நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸா மக்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசேர்த்த சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் ஆயுதப்படையினர், காஸாவில் ஆகாயம் வழியே நிவாரணப் பொருள்களைக் கொண்டு சேர்த்துவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.

வாழ்வில் ஒருமுறை கிடைக்கக்கூடிய அனுபவம் அது என்று பணியில் பங்கேற்ற வீரர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூர் ஆயுதப்படையினர் இதுவரை 9 தொகுதிகளாக உதவிப் பொருள்களை வழங்கியுள்ளனர்.

காஸாவுக்கு உதவிப் பொருள்களை வழங்கும் பணி இரண்டு வாரம் நீடித்தது.

பத்திரமாக நாடு திரும்பிய வீரர்களை அவர்களின் உற்றார் உறவினர்கள் ஆவலாய் வரவேற்றனர்.

உதவிப் பொருள்களை வழங்கச் சென்றது புதிய அனுபவம் மட்டுமல்ல. அது மனநிறைவும் தந்ததாக வீரர்கள் கூறினர்.

சிங்கப்பூர் வீரர்கள், வெளிநாட்டுத் துருப்பினருடன் இணைந்து நிவாரணப் பொருள்களை விநியோகிக்க வேண்டும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஒன்றிணைந்து பணியாற்றுவது மிக அவசியமானது.

இயற்கையும் சில சவால்களை முன்வைத்தது. காஸா வட்டாரத்தின் வெயில் கொளுத்தியது

40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உதவி வழங்கவேண்டிய நிலை இருந்தது.

உடலைக் குளிர்விக்கும் அங்கி, போதிய நீர் அருந்துவது, அவ்வப்போது ஓய்வெடுப்பது முதலிய வழிகளில் சூழலைச் சமாளித்ததாக சிங்கப்பூர் வீரர்கள் குறிப்பிட்டனர்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset