
செய்திகள் விளையாட்டு
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஸ்டார்க் ஓய்வு
சிட்னி:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். இதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.
35 வயதான ஸ்டார்க், கடந்த 2012-ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் விளையாடி இருந்தார். மொத்தம் 65 போட்டிகளில் விளையாடி, 79 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருந்தார். இந்த சூழலில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
“இப்போதும், எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே நான் முன்னுரிமை கொடுப்பேன். ஆஸ்திரேலிய அணிக்காக நான் விளையாடிய டி20 கிரிக்கெட் போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் இனிதானது. கடந்த 2021-ல் நாங்கள் டி20 உலகக் கோப்பையை வென்றோம்.
எதிர்வரும் ஆஷஸ் தொடர், இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர், 2027-ல் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வகையில் நான் என்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதன் மூலம் என்னால் உடற்தகுதியுடன் இருக்க முடியும். அதேநேரத்தில் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான பந்துவீச்சை யூனிட்டை தயார் படுத்தவும் இது வாய்ப்பளிக்கும் என கருதுகிறேன்” என ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2025, 12:19 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: அர்ஜெண்டினா அபாரம்
September 5, 2025, 12:18 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா வெற்றி
September 5, 2025, 9:56 am
லிவர்பூல் அணியின் வெற்றிப் பேரணி மீது காரை மோதிய 134 பேருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஏற்க மறுப்பு
September 4, 2025, 8:38 am
பெண் நடுவரை அறைந்த கொலம்பிய கிளப் வீரர்
September 4, 2025, 8:35 am
லியோனல் மெஸ்ஸிக்கான கடைசி தகுதிச் சுற்று ஆட்டம்
September 4, 2025, 8:27 am
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்குள் நுழைந்தனர்
September 3, 2025, 8:40 am
உலகக் கிண்ணத்தை வென்ற ஜெராட் பிக் சுல்தான் இப்ராஹிம் அரங்கிற்கு வருகை தந்தார்
September 3, 2025, 8:37 am
புதிய எதிர்காலத்தை தேடி அஸ்டன் வில்லாவில் ஜேடன் சான்கோ இணைந்தார்
September 3, 2025, 7:23 am