செய்திகள் விளையாட்டு
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்றுங்கள்: ஈரான் கோரிக்கை
டெஹ்ரான்:
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டுமென ஃபிஃபா நிர்வாகத்திடம் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளின் தலைமையில் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த ஃபிப்ரவரி. 28 முதல் போர் நடைபெற்று வருவதால் ஈரானின் கால்பந்து வீரர்கள் அமெரிக்கா செல்வது மிகுந்த ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
இத்துடன், அமெரிக்கா வரும் ஈரானிய கால்பந்து வீரர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதனால், அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற வேண்டுமென ஃபிஃபா நிர்வாகத்திடம் ஈரானின் கால்பந்து கூட்டமைப்புப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, மெக்சிகோவில் உள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 5:04 pm
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
March 17, 2026, 3:57 pm
ஹரிமாவ் மலாயாவின் ஆசியக் கிண்ணக் கனவு சிதைந்தது
March 17, 2026, 10:47 am
மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக ரியல்மாட்ரிட் அணியை வலுப்படுத்த எம்பாப்பே மீண்டும் வருகிறார்
March 17, 2026, 10:44 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல ஆர்வமாக உள்ளேன்: மெஸ்ஸி
March 16, 2026, 2:47 pm
ஹரிமாவ் மலாயா அணி 2031 ஆசிய கிண்ணத் தகுதி போட்டியில் தடைசெய்யப்படமாட்டாது: AFC
March 16, 2026, 10:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 16, 2026, 10:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
March 15, 2026, 10:37 pm
ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை சிவசங்கரி வென்றார்
March 15, 2026, 9:39 am
