செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல ஆர்வமாக உள்ளேன்: மெஸ்ஸி
நியூயார்க்:
இண்டர் மியாமி அணிக்காக விளையாடி வரும் அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 2026ஆம் ஆண்டு பிபா உலகக் கிண்ணத்தை வென்று சாம்பியன் தகுதியைத் தக்க வைக்க இறைவன் தன்னை அனுமதிப்பார் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் தான் 100% உடற்தகுதியுடன் இருந்தால் நாட்டுக்காக மீண்டும் ஒரு உலகக் கிண்ண போட்டியில் ஆடி வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கவே ஆவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
உண்மை என்னவெனில் நான் உலகக் கிண்ண போட்டில் அர்ஜெண்டினா அணியை வழிநடத்தவே விரும்புகிறேன்.
உலகக் கிண்ண போட்டியில் ஆடுவது என்பதே ஒரு அசாதாரண அனுபவம்தான். நான் அங்கு இருக்கவே விரும்புகிறேன்.
நான் நல்லபடியாக உடல் தகுதியைப் பாதுகாத்து என் தேசிய அணிக்கு உதவுவதையே விரும்புகிறேன்.
உடல் தகுதியைப் பொறுத்தவரை தினசரி அடிப்படையில்தான் நான் மதிப்பீடு செய்வேன்.
அடுத்த ஆண்டு பிரீ சீசன் ஆரம்பிக்கிறேன். நான் 100% உடல் தகுதியுடன் இருக்கிறேனா என்பதைப் பார்க்க வேண்டும்.
நான் உண்மையில் உலகக் கிண்ண போட்டியுல் ஆட ஆவலாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 10:47 am
மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக ரியல்மாட்ரிட் அணியை வலுப்படுத்த எம்பாப்பே மீண்டும் வருகிறார்
March 16, 2026, 2:47 pm
ஹரிமாவ் மலாயா அணி 2031 ஆசிய கிண்ணத் தகுதி போட்டியில் தடைசெய்யப்படமாட்டாது: AFC
March 16, 2026, 10:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 16, 2026, 10:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
March 15, 2026, 10:37 pm
ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை சிவசங்கரி வென்றார்
March 15, 2026, 9:39 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி முதலிடம்
March 15, 2026, 9:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 13, 2026, 10:56 am
ஜெர்மனி தேசிய அணிக்கு புதிய பயிற்சியாளராக க்ளோப்பா?: எதிர்பார்ப்பு அதிகரிப்பு
March 13, 2026, 10:00 am
