நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்: சிங்கப்பூர் NEA அறிவிப்பு 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் கடலில் நீந்துவது, கடல் நீருடன் நேரடித் தொடர்புகொண்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி தேசியச் சுற்றுப்புற அமைப்பு (NEA) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட Marine Dynamo கப்பலும் மால்ட்டாவில் (Malta) பதிவுசெய்யப்பட்ட கப்பலும் நேற்று தானா மேராவுக்கு அருகே மோதிக்கொண்டன.

சம்பவ இடத்துக்கு அருகில் மிதமான எண்ணெய்க் கசிவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு  ஆலோசனை வழங்கியுள்ளது.

கப்பலில் இருந்த ஊழியர் ஒருவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தால் கடல் போக்குவரத்துக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.

நிலைமையை அணுக்கமாகக் கண்காணிப்பதாகவும் சம்பவத்தை விசாரிக்கவிருப்பதாகவும் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset