நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்: TNPSC-யின் கேள்வித்தாள் குளறுபடி 

சென்னை:

டிஎன்பிஎஸ்சி தேர்வின் கேள்வித் தாளில், அய்யா வைகுண்ட சுவாமியின் பெயரைத் தவறுதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் இளநிலை உதவி வரைவாளர் தேர்வு மாநில முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) நடத்தப்பட்டது.

இந்த தேர்வின் கேள்வித் தாளில் இடம்பெற்ற இரண்டு கேள்விகள் தவறுதலாக அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

பின்வரும் வைகுண்ட சுவாமிகளின் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் வழங்கப்பட்ட முதல் விருப்பத்தில், ”முடிசூடும் பெருமாள் என்றும் முத்துக்குடி என்றும் அழைக்கப்பட்டார்” என அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால், இதே கேள்வி ஆங்கிலத்தில் முடிசூடும் பெருமாள் என்ற இடத்தில்  தி காட் ஆஃப் ஹேர் கட்டிங் என்று தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. 

தி காட் ஆஃப் ஹேர் கட்டிங்:

 விருதை பிச்சை எடுத்தார்களா? 

மக்களைத் தேடி மருத்துவம் பற்றிய உண்மை தகவல்களை அடையாளம் காணவும்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கான மூன்றாவது விருப்பத்தில், “ஐக்கிய நாடுகள் அவையில் 2024 ஆம் ஆண்டு விருது பெற்றது” என அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால், ஆங்கிலத்தில் bagged (பெற்றது) என அச்சிடுவதற்கு பதிலாக begged (பிச்சை எடுத்தது) என எழுத்துப் பிழையுடன் அச்சடிக்கப்பட்டிருந்தது.

முக்கியமான இரு கேள்விகள் தவறுதலாக அச்சிடப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். லட்சக்கணகான இளைஞர்கள் ஆண்டுக்கணக்கில் தயாராகி தேர்வு எழுத வந்தால், இப்படி அலட்சியமாக கேள்வித் தாளைத் தயார் செய்வதா? என்று கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset