செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாதுகாப்பற்ற கொள்கலனில் பெட்ரோலை சேமிப்பது அபாயகரமானது: இந்திய அரசு எச்சரிக்கை
சென்னை:
‘நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. நுகர்வோர் பாதுகாப்பற்ற கொள்கலன்களில் பெட்ரோல் அல்லது எந்த எரிபொருளையும் எடுத்துச் செல்வது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும்’ என பெட்ரோலிய அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில்லறை விற்பனை நிலையத்தில், பெட்ரோல் பாதுகாப்பற்ற கொள்கலனில் எடுத்துச் செல்லப்படுவதை அறிந்தோம், இது பாதுகாப்பற்றது.
நுகர்வோர் பாதுகாப்பற்ற கொள்கலன்களில் பெட்ரோல் அல்லது எந்த எரிபொருளையும் எடுத்துச் செல்லவோ அல்லது சேமிக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏனெனில், இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க் செயல்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகிக்கும்போது பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அனைத்து சில்லறை விற்பனை நிலையங்கள், டீலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு மீறலும் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 4:28 pm
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
March 12, 2026, 11:35 am
பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்: தூத்துக்குடியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை கொலை
March 12, 2026, 8:52 am
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
March 11, 2026, 5:04 pm
இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்த பிறகு வீடு திரும்பிய தந்தை: பொள்ளாச்சியில் பரபரப்பு
March 11, 2026, 6:03 am
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படுகின்றன
March 10, 2026, 5:28 pm
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரம் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
March 9, 2026, 2:26 pm
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
March 9, 2026, 2:23 pm
