செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் அனைத்து முஸ்லிம் கட்சியினரையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்த சிராத் குளோபல் ஃபவுண்டேஷன் இஃப்தார் நிகழ்ச்சி
சென்னை:
கடந்த வெள்ளிக் கிழமை சிராத் குளோபல் ஃபவுண்டேஷன் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி சென்னையில் ஜைத்தூன் உணவகத்தில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு சிராத் ஒருங்கிணைப்பு குழு தலைவர் டத்தோ வீரா ஷாஹுல் ஹமீது தாவுத் தலைமை தாங்கினார்.
ரமலான் மாதம் மனிதர்களிடையே ஒற்றுமை, அன்பு, சகோதரத்துவத்தை வளர்க்கும் புனிதமான காலம் என்றும் இஃப்தார் போன்ற நிகழ்ச்சிகள் சமூக நல்லிணக்கத்தையும், மனித உறவுகளையும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, சமீபத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற சிராத் உலகளாவிய மாநாடு தொடர்பான காணொலி நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.
அம்மாநாட்டின் முக்கிய அம்சங்களையும் அதன் நோக்கங்களையும் குறிக்கும் அந்தக் காணொலி நிகழ்வில் கலந்து கொண்டோரின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட யுனைடெட் எக்கானாமிக் ஃபோரம் தலைவர் அஹமத் புகாரி, முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்குக் கல்வி, ஒற்றுமை, இளைஞர்களின் பங்கு மிக முக்கியம் என்றும் சமூக வளர்ச்சி, கல்வி மேம்பாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமைச்சர் ஆவடி நாசர், முஸ்லிம்லீக் தலைவர் காதர் மொஹிதீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மஜக தலைவர் தமீம் அன்சாரி, SDPI கட்சியின் தலைவர் முபாரக், பிரபல வர்த்தகர்கள் பத்ம ஸ்ரீ ரபீக் அஹ்மத், பீட்டர் இங்க்லாண்ட் குழுமத்தைச் சேர்ந்த நஸீர் அத்தாவுல்லா, ரிஃபா சேம்பர் ஆப் காமர்ஸைச் சேர்ந்த யூனுஸ் சேட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் சிராஜூதின், நம்பிக்கை இயக்குனர் கஸ்ஸாலி பஷீர் ஆகியோருடன் சிராத் ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
அவர்களுடன் தமிழ் நாட்டின் முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
ராயல் கிங்ஸ் குழுமத்தின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் ரியாசுதீன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 11:45 pm
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு
March 14, 2026, 7:05 pm
பாதுகாப்பற்ற கொள்கலனில் பெட்ரோலை சேமிப்பது அபாயகரமானது: இந்திய அரசு எச்சரிக்கை
March 13, 2026, 4:28 pm
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
March 12, 2026, 11:35 am
பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்: தூத்துக்குடியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை கொலை
March 12, 2026, 8:52 am
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
March 11, 2026, 5:04 pm
இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்த பிறகு வீடு திரும்பிய தந்தை: பொள்ளாச்சியில் பரபரப்பு
March 11, 2026, 6:03 am
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படுகின்றன
March 10, 2026, 5:28 pm
