செய்திகள் தமிழ் தொடர்புகள்
பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்: தூத்துக்குடியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை கொலை
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்று காலை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். முதற்கட்ட விசாரணையில், அந்த மாணவி சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்த மாணவியின் உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களைச் சமாதானப்படுத்தி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தப்பியோடிய மர்ம நபர்களை விரைந்து பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை அடையாளம் காண அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 8:52 am
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
March 11, 2026, 5:04 pm
இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்த பிறகு வீடு திரும்பிய தந்தை: பொள்ளாச்சியில் பரபரப்பு
March 11, 2026, 6:03 am
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படுகின்றன
March 10, 2026, 5:28 pm
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரம் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
March 9, 2026, 2:26 pm
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
March 9, 2026, 2:23 pm
தமிழக அரசை கண்டித்து 12-ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்
March 7, 2026, 2:47 pm
தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட்டு 30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்
March 6, 2026, 11:23 am
‘உதயசூரியன்’ சின்னத்தில் 172 தொகுதிகளிலும் 62 தொகுதிகளில் தனி சின்னத்திலும் திமுக கூட்டணி போட்டி
March 4, 2026, 2:28 pm
