செய்திகள் தமிழ் தொடர்புகள்
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
மதுரை:
மதுரை விமானநிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து கிடைத்துள்ள நிலையில் அதற்கான வரவேற்பும், ஆதரவுகளும் அதிகரித்துள்ளன.
மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை விமான நிலைய ஓடுதளம் 1942ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து மதுரைக்கு அச்சிட்ட செய்தித்தாள்களைக் கொண்டு வருவதற்காக செயல்பட்டது.
1952இல் சிவில் விமான நிலையமாகவும், 1957-ம் ஆண்டு வணிக நடவடிக்கையையும் தொடங்கியது.
2011-ல் சுங்க விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, அனைத்துலக நடவடிக்கையை தொடங்கியது. 2012, செப். முதல் இலங்கைக்கு முதல் அனைத்துலக விமான சேவை தொடங்கியது.
தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா, வணிக மையமான மதுரை, விமானப் போக்குவரத்தில் இந்தியப் பெருநகரங்களுடன் இணைக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு அக். 1 முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணைய நிறுவனத் தலைமையகத்திலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலின்படி மத்திய அமைச்சரவைக் குழுவால் அங்கீகரித்தபடி மதுரை விமான நிலையம் மார்ச் 10 முதல் அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் விக்கிஷித் பாரத் 2047இன் தொலைநோக்கு பார்வைக்கேற்ப உலகுக்கு, மதுரை விமான நிலையத்தின் கதவுகளைத் திறப்பதன் மூலம் மதுரை அனைத்துலக விமான பயணத்துக்கான முக்கிய மையமாக மாற வழிவகுக்கும்.
மதுரையிலிருந்தும், மதுரைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் இதனால் இன்னும் அதிகரிக்கும். மதுரை விமான நிலையம் இந்தியாவுக்குள் மட்டுமின்றி சர்வதேச நகரங்களுக்கும் இணைப்புகளை எளிதாக்க உதவும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 5:04 pm
இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்த பிறகு வீடு திரும்பிய தந்தை: பொள்ளாச்சியில் பரபரப்பு
March 11, 2026, 6:03 am
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படுகின்றன
March 10, 2026, 5:28 pm
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரம் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
March 9, 2026, 2:26 pm
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
March 9, 2026, 2:23 pm
தமிழக அரசை கண்டித்து 12-ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்
March 7, 2026, 2:47 pm
தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட்டு 30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்
March 6, 2026, 11:23 am
‘உதயசூரியன்’ சின்னத்தில் 172 தொகுதிகளிலும் 62 தொகுதிகளில் தனி சின்னத்திலும் திமுக கூட்டணி போட்டி
March 4, 2026, 2:28 pm
கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது: விஜய்
March 4, 2026, 1:13 pm
