செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர வாஞ்சையோடு பழகி வாழும் முதன்மையான மாநிலம் தமிழகம்: மதுரையில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
மதுரை:
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலில், எல்லீஸ் நகர் பகுதி திமுக சார்பில் நேற்று நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல்,ம் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
தனது முன்னோர்கள் வழியில் மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தானும் உறுதியோடு இருப்பதை தமது சிறப்புரையில் அமைச்சர் பதிவு செய்தார்.

அனைவரையும் அரவணைக்கும் முதன்மை மாநிலம் தமிழகம் என்று அவர் கூறினார். இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும் ஒற்றுமையோடு சகோதர வாஞ்சையோடு பழகி வாழ்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ., துணை மேயர் திரு. நாகராஜன்,மாமன்ற உறுப்பினர் திருமிகு செல்வி செந்தில், திமுக பகுதி செயலாளர் திரு. பி.கே.செந்தில், வட்ட செயலாளர் திரு. பி.கே.சுரேஷ்,, ஜமாத் தலைவர் திரு. நிஜாம் அலிகான், பல்வேறு கூட்டணிக் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள், அருட்தந்தை ஜோசின், அர்ச்சகர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 4:28 pm
சசிகலாவின் புதிய கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
March 12, 2026, 11:35 am
பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த விபரீதம்: தூத்துக்குடியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை கொலை
March 12, 2026, 8:52 am
மதுரை விமான நிலையத்திற்கு அனைத்துலக அந்தஸ்து
March 11, 2026, 5:04 pm
இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்த பிறகு வீடு திரும்பிய தந்தை: பொள்ளாச்சியில் பரபரப்பு
March 11, 2026, 6:03 am
சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படுகின்றன
March 10, 2026, 5:28 pm
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரம் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
March 9, 2026, 2:26 pm
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
March 9, 2026, 2:23 pm
தமிழக அரசை கண்டித்து 12-ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்
March 7, 2026, 2:47 pm
