செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரம் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான நிலையில் மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், வட தமிழகம் , புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்.
மேலும், வரும் 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மிக லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 16-ஆம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர், தென் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வானம் பெரும்பாலும் வறண்டு காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 2:26 pm
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
March 9, 2026, 2:23 pm
தமிழக அரசை கண்டித்து 12-ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்
March 7, 2026, 2:47 pm
தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட்டு 30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்
March 6, 2026, 11:23 am
‘உதயசூரியன்’ சின்னத்தில் 172 தொகுதிகளிலும் 62 தொகுதிகளில் தனி சின்னத்திலும் திமுக கூட்டணி போட்டி
March 4, 2026, 2:28 pm
கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது: விஜய்
March 4, 2026, 1:13 pm
கொடைக்கானலில் இஸ்ரேலியர்களுக்கு 'துப்பாக்கி ஏந்திய' போலீஸ் பாதுகாப்பு
March 4, 2026, 1:03 am
