நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது

சிங்கப்பூர்: 

சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. 

பூனை நிர்வாகக் கட்டமைப்புத் திட்டம் ஓராண்டுக்கு முன்னர் நடப்புக்கு வந்த பிறகு பூனைகளுக்கு உரிமம் தரப்பட்டதாக விலங்குநல மருத்துவச் சேவை அமைப்பு (AVS) இன்று தெரிவித்துள்ளது.

அனைத்துப் பூனைகளுக்கும் மின்சில்லுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவை உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவை இரண்டும்  கட்டாயமாக்கப்பட்டன.

உரிமம் பெற்ற பூனைகளில் சுமார் 95 விழுக்காட்டு பூனைகளுக்குக் கருத்தடை செய்யப்பட்டது. 

41,500க்கும் அதிகமானோர் பூனை உரிமையாளர்களுக்கான பயிற்சியை இணையம்வழி முடித்துள்ளனர். 

பூனைகள் குறித்த புகார்கள் குறைந்திருப்பதாக விலங்குநல மருத்துவச் சேவை அமைப்பு கூறியது. 

சென்ற ஆண்டு (2024) 2,700 புகார்கள் தரப்பட்டன. 

2019ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,300ஐத் தாண்டியது. 

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset