நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு; 1500க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காபூல்: 

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 662க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் நள்ளிரவு 12 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால், வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன.

நேற்று (31 ஆகஸ்ட்) ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்தது. சில கிராமங்கள் தரைமட்டமாயின.

1,500க்கும் அதிகமானோர் காயமுற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Afghanistan earthquake kills 622 with more than 1,500 injured

இடிபாடுகளிடயே தேடல் பணிகள் இன்னும் நடைபெறுகின்றன.

காயமுற்றோர் ஹெலிகாப்டர் வழி மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் பார்க்கமுடிகிறது.

தற்போதைக்குத் தேடல் பணிகளுக்கோ மீட்புப் பணிகளுக்கோ வெளிநாடுகள் உதவியளிக்க முன்வரவில்லை என்று ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சு சொன்னது.

பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அதனால், இன்னும் உயிரிழப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில், மீண்டும் 4.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த 2 நிலநடுக்கத்தால், நகங்கர் மாகாணத்தில் மக்கள் அச்சம் அடைந்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset