நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார் 

ஹைதராபாத்:

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இன்று காலமானார். அவருக்கு வயது 72.

சுமார் 1200 படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ள அவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் பணியாற்றியுள்ளார். 

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர், தமிழில் மறுபடியும், பூவே உனக்காக, திருடா திருடி, அருந்ததி, மகதீரா. பாகுபலி உட்பட பல படங்களில் இவர் நடன அமைப்பு பேசப்பட்டது. ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் நடித்த ‘மகதீரா’ படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

நடனம் அமைத்ததோடு, சில படங்களில் நடித்தும் இருக்கிறார். பாலாவின் பரதேசி, சந்தானம் நடித்த ’கண்ணா லட்டு தின்ன ஆசையா?’, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார், தில்லுக்கு துட்டு 2 உட்பட பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத் கச்சிபவுலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

பத்து நாட்களுக்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிவசங்கர் மாஸ்டர் இன்று உயிரிழந்தார். அவர் மறைவு திரையுலகினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிவசங்கர் மாஸ்டரின் மூத்த மகன் விஜய் சங்கரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவசங்கர் மாஸ்டரின் மனைவி சுகன்யா, கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset