நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

Gegar Vaganza பாட்டுத்திறன் போட்டியில் சிங்கப்பூர்ப் பாடகர் இஸ்கண்டார் இஸ்மாயில் வாகை சூடினார் 

கோலாலம்பூர்:

சிங்கப்பூர்ப் பாடகர் இஸ்கண்டார் இஸ்மாயில் (Iskandar Ismail) மலேசியாவின் பிரபல ககர் வகன்ஸா (Gegar Vaganza) பாட்டுத்திறன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

போட்டியின் இறுதிச் சுற்று நேற்றிரவு நடைபெற்றது.

12ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட போட்டியில் வென்ற 47 வயது இஸ்கண்டாருக்கு 100,000 ரிங்கிட் (சுமார் 32,000 வெள்ளி) பரிசு கிடைத்தது.

இதற்கு முன்பு சிங்கப்பூரர்கள் இருவர் அதே போட்டியில் வெற்றி அடைந்துள்ளனர்.

2019இல் ஹார்டி மிர்ஸா (Hady Mirza), 2021இல் அலிஃப் அசிஸ் (Aliff Aziz) ஆகியோர் வாகை சூடினர்.

செய்தியாளர்களிடம் பேசிய இஸ்கண்டார், முதலில் போட்டியில் கலந்துகொள்ளும் எண்ணமே தமக்கு இல்லை என்றார். மனைவியின் ஆதரவால் அதில் பங்கேற்றதாகச் சொன்னார்.

"இறுதிச் சுற்றில் வெற்றி பெறுவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களின் ஆதரவு மனம் நெகிழ வைக்கிறது," என்றார் இஸ்கண்டார்.

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset