நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழலை எதிர்த்துப் போராடுவது கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்: பிரதமர்

சுபாங்:

ஊழலை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

நான் பிரதமராக பதவியேற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிறது.

இந்த மூன்று ஆண்டுகளில் ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் சவாலானதாகும்.

அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கவர்களிடையே பேராசை, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போக்கு இன்னும் ஆழமாக வேரூன்றி இருப்பது வருத்தமளிக்கிறது.

பெரும் ஊழலை எதிர்த்துப் போராடுவது எளிதானது அல்ல.

ஏனென்றால் இவர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கவர்கள், செல்வந்தர்கள். மேலும் நாசவேலை செய்து தடுக்க முயற்சிப்பார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset