
செய்திகள் மலேசியா
ஏழாவது மாடியில் இருந்து விழுந்த வருங்கால மருத்துவர் படுகாயமடைந்தார்
மலாக்கா:
அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்த வருங்கால மருத்துவர் படுகாயமடைந்தார்.
மத்திய மலாக்கா போலிஸ் தலைவர் கிறிஸ்டோபர் பதிட் இதனை கூறினார்.
மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஒருவர்,
ஜாலான் துன் பேராக்கில் மூன்று வகுப்பு தோழர்களுடன் வாடகைக்கு எடுத்த அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த பணிக்குழு உறுப்பினர்கள், தீயணைப்புப் படையினரும் மலாக்கா மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களும் பாதிக்கப்பட்டவரை மீட்பதை கண்டதாக அவர் கூறினார்.
மருத்துவ அதிகாரிகள் நடத்திய உடல் பரிசோதனையில்,
24 வயதான பாதிக்கப்பட்டவரின் கால்கள், தலையில் இரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் மலாக்கா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 11:06 pm
விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவர் விழுந்தார்: போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்
August 26, 2025, 10:12 pm
எத்தனை ஆண்டுகள் தான் தோழமை கட்சியாக இருப்பது; எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
August 26, 2025, 9:36 pm
இந்திய சமுதாயத்தின் நாட்டுப்பற்றை குறைத்து மதிப்பிட வேண்டாம்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
August 26, 2025, 7:32 pm
செப் 5இல் தலைநகரில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மீலாதுன் நபி ஊர்வலம்
August 26, 2025, 1:57 pm
புரூணை சுல்தானுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது
August 26, 2025, 1:25 pm
சம்சுலின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதுதான் முக்கியம்: தாயார்
August 26, 2025, 1:19 pm