
செய்திகள் மலேசியா
எச்ஆர்டி கோர்ப், எஸ்பிஇ இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மலேசிய எரிசக்தி துறையின் நிபுணத்துவத்தை வலுப்படுத்தும்: டாக்டர் சைட் அல்வி
கோலாலம்பூர்:
எச்ஆர்டி கோர்ப், எஸ்பிஇ இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மலேசிய எரிசக்தி துறையின் நிபுணத்துவத்தை வலுப்படுத்தும்.
எச்ஆர்டி கோர்ப் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சைட் அல்வி முஹம்மது சுல்தான் இதனை கூறினார்.
மனிதவள மேம்பாட்டுக் கழகம் எச்ஆர்டி கோர்ப்பும் ஆசிய பசிபிக் பெட்ரோலியப் பொறியாளர்கள் சங்கமும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன.
இது உலகளாவிய எரிசக்தி மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மலேசியாவின் பணியாளர்களின் திறன்களை மேலும் வலுப்படுத்தும்.
மேலும் ஒரு மூலோபாய கூட்டாண்மையில் நுழைந்தபோது ஒரு புதிய உத்வேகத்தைப் பெற்றது.
இந்தக் கூட்டாண்மை உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை வழங்கும்.
அதோடு மலேசிய நிபுணர்கள் அனைத்துலக அளவில் போட்டியிட அதிகாரம் அளிக்கப்படும்.
குறிப்பாக புதுமையான தொழில்நுட்பங்கள், உலகளாவிய நெட்வொர்க்குகள், உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில் வாய்ப்புகளுக்கான அணுகலையும் திறக்கிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் எஸ்பிஇ ஆசிய பசிபிக்கின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பத் திட்டங்கள் மூலம் ஆண்டுதோறும் குறைந்தது 500 பயிற்சி பெற்ற மேம்பட்ட திறன்களைப் பெற்ற உள்ளூர் பொறியாளர்கள் உருவாக்க முடியும்.
எச்ஆர்டி கோர்ப்பில் பதிவுசெய்யப்பட்ட முதலாளிகள் எஸ்பிஇயின் உலகளாவிய மாநாடுகள், பட்டறைகள், நிகழ்வுகள் உள்ளிட்ட சர்வதேசத் திட்டங்களில் பங்கேற்பதற்காக லெவி பங்களிப்புகளை நேரடியாகச் செலுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இதனால் உள்ளூர் நிறுவனங்கள் நிபுணர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கற்றலை அணுக முடியும்.
மேலும் நாட்டின் பணியாளர்கள் சுறுசுறுப்பாகவும், போட்டித்தன்மையுடனும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான எச்ஆர்டி கோர்ப்பின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 11:12 pm
ஏழாவது மாடியில் இருந்து விழுந்த வருங்கால மருத்துவர் படுகாயமடைந்தார்
August 26, 2025, 11:06 pm
விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவர் விழுந்தார்: போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்
August 26, 2025, 10:12 pm
எத்தனை ஆண்டுகள் தான் தோழமை கட்சியாக இருப்பது; எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
August 26, 2025, 9:36 pm
இந்திய சமுதாயத்தின் நாட்டுப்பற்றை குறைத்து மதிப்பிட வேண்டாம்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
August 26, 2025, 7:32 pm
செப் 5இல் தலைநகரில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மீலாதுன் நபி ஊர்வலம்
August 26, 2025, 1:57 pm
புரூணை சுல்தானுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது
August 26, 2025, 1:25 pm
சம்சுலின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதுதான் முக்கியம்: தாயார்
August 26, 2025, 1:19 pm