
செய்திகள் மலேசியா
எத்தனை ஆண்டுகள் தான் தோழமை கட்சியாக இருப்பது; எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியில் மலேசிய மக்கள் சக்தி கட்சி எத்தனை ஆண்டுகள்தான் தோழமை கட்சியாக இருப்பது.
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
மஇகா பேராளர் மாநாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதில் தேசிய முன்னணியில் மஇகா தொடர்ந்து இருக்க வேண்டாம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இவ்வேளையில் அக் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து வருகிறேன்.
காரணம் அவர் நினைத்தால் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அவர் அடிமட்ட உறுப்பினர்களின் குரல்களை முதலில் கேட்டு வருகிறார்.
அதன்பின் மஇகாவின் தேசியப் பேராளர் மாநாட்டில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஇகா இல்லை என்றால் தேசிய முன்னணியில் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு முக்கிய இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
உண்மையில் தேசிய முன்னணியில் மலேசிய மக்கள் சக்தி கட்சி தோழமை கட்சியாக தான் உள்ளது.
தோழமைக் கட்சி என்ற அந்தஸ்தை மாற்ற நாங்களும் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
இனி எத்தனை ஆண்டுகளாக தோழமை கட்சியாக இருப்பது. ஆக எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும்.
அப்போது மலேசிய மக்கள் சக்தி கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 11:12 pm
ஏழாவது மாடியில் இருந்து விழுந்த வருங்கால மருத்துவர் படுகாயமடைந்தார்
August 26, 2025, 11:06 pm
விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவர் விழுந்தார்: போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்
August 26, 2025, 9:36 pm
இந்திய சமுதாயத்தின் நாட்டுப்பற்றை குறைத்து மதிப்பிட வேண்டாம்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
August 26, 2025, 7:32 pm
செப் 5இல் தலைநகரில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மீலாதுன் நபி ஊர்வலம்
August 26, 2025, 1:57 pm
புரூணை சுல்தானுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது
August 26, 2025, 1:25 pm
சம்சுலின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதுதான் முக்கியம்: தாயார்
August 26, 2025, 1:19 pm