நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செப் 5இல் தலைநகரில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மீலாதுன் நபி ஊர்வலம்

கோலாலம்பூர்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிறந்த நாள் விழாவை மீலாது நபி விழாவாக உலகெங்கும் முஸ்லிம்கள் கொண்டாடி வருகிறார்கள். 

இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் அவரது நபிமொழிகள், வழிகாட்டுதல்கள், புகழ்மாலைகள், சொற்பொழிவுகள் என்று பலவிதமாக நினைவுகூர்கிறார்கள்

இது நபிகள் நாயகத்தின் மீதுள்ள அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மாதமாகும்.

முஸ்லிம்கள் பெருமானார் பிறந்த நாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூர்ந்து, ஒழுக்கங்களையும் உண்மையான வாழ்வையும் பின்பற்றுவதன் மூலம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் மலேசிய முஸ்லிம் இளைஞர் மன்றம் (MMYC) ஏற்பாட்டில் இவ்வாண்டு மீலாதுன் நபி ஊர்வலம் தலைநகரில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 2.00 மணிக்கு மேல் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் மீலாதுன் நபி ஊர்வலம் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் தொடங்கி நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெறும்.

ஜாலன் மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி துன் பேராக், லெபோ அம்பாங், டாங்க் வாங்கி சாலை வழியாக மீண்டும் மஸ்ஜித் இந்தியாவை ஊர்வலம் வந்தடையும்.

காவல் துறையின் அனுமதியோடும் டிபிகேஎல்லின் இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புக்கள் ஆதரவோடு இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எம்.எம்.ஒய்.சி.அமைப்பின் ஆலோசகர் அஸ்ரின் சொன்னார்.

மலேசிய இந்திய முஸ்லிம் பெருமக்கள் அணி திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் மஸ்ஜித்கள், மதரஸாக்களின் நிர்வாகிகள், மாணவர்கள் திரளாக கலந்துகொள்ளும்படியும் வழி நெடுக நபி புகழ்பாடி வரும்படி அன்புடன் அழைப்பதாக அமைப்பின் தலைவர் அஸ்மி சதக்கத்துல்லாஹ் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மிம்காய்ன் துணைத் தலைவர் டத்தோ அப்துல் ஹக்கீம், சிம்ஸ் தலைவர் எம். இசட். கனி, மாவார் தலைவர் அலீம் உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset