நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் நாட்டுப்பற்றை குறைத்து மதிப்பிட வேண்டாம்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்தினரின் நாட்டுப்பற்றை பற்றி யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனை வலியுறுத்தினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் இன்று பிரிக்ஃபீல்ட்ஸ் வட்டார மக்களுக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திரத் தினத்தை முன்னிட்டு இக் கொடி வழங்கப்பட்டது.

அதேவேளையில் இந்தியர்களை மையமாகக் கொண்டிருக்கும் பிரிக்ஃபீல்ட்ஸ் வட்டாரத்தில் தேசியக் கொடி வழங்கியதற்கு முக்கிய காரணம் உள்ளது.

அதாவது இந்திய சமுதாயம் அதிக அளவில் தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவது இல்லை. இதனால் அவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என குற்றம்சாட்டுகள் எழுகிறது.

இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானதாகும். 

காரணம் இந்நாட்டில் உள்ள இந்திய சமுதாய மக்கள் அதிக நாட்டுப்பற்றை கொண்டவர்களாக உள்ளனர்.

ஆக அம் மக்களை நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என யாரும் கூறக்கூடாது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

இதனிடையே நாட்டின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு இந்திய சமுதாய மக்கள் வீடுகள் தோறும் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset