நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவர் விழுந்தார்: போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்

சபாக் பெர்ணம்:

விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பில் போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சிலாங்கூர் போலிஸ் தலைவர் ஷசாலி கஹார் இதனை கூறினார்.

சபாக் பெர்னாமில் உள்ள ஒரு பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து  மூன்றாம் படிவம் மாணவர் விழுந்ததாக நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து போலிசாருக்கு புகார் கிடைத்துள்ளது.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1) இன் கீழ் தனது துறை ஒரு விசாரணை அறிக்கையைத் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மாணவர் பாதுகாப்பு அம்சத்தைத் தவிர, விடுதி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது நண்பர்களின் சமூகப் பின்னணியையும் விசாரணை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset