நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புரூணை சுல்தானுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது

கோலாலம்பூர்:

புரூணை சுல்தானுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

புரூணை சுல்தான், சுல்தான் ஹஸ்னால் போல்கியா நேற்று முதல் மலேசியாவுக்கான நான்கு நாள் அரசு முறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இன்று இஸ்தானா நெகாராவில் நாட்டின் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுல்தான் ஹஸ்னால் போல்கியா காலை 10 மணிக்கு பெங்கீரன் முடா அப்துல் மதின் போல்கியாவுடன் வந்தார்.
 
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஜொகூர் துங்கு இட்ரிஸ் இஸ்கந்தர் சுல்தான் இப்ராஹிமின் துங்கு தெமெங்கோங் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல், அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset