நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறு குறு வணிகர்களின் போட்டித் தன்மையை வலுப்படுத்த குஸ்கோப் பல்வேறு ஆதரவை வழங்கி வருகிறது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

சிறு குறு வணிகர்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்த குஸ்கோப் தொடர்ந்து பல்வேறு ஆதரவை வழங்கி வருகிறது.

குஸ்கோப் எனப்படும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

விற்பனை பெருகிய முறையில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் சிறு வணிகர்களின் புகார்களை அமைச்சு பரிசீலிப்பது குறித்தும், அவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்து கோலா கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி அப்துல் லத்தீஃப் பின் அப்துல் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

வாழ்க்கைச் செலவின சவால்களை எதிர்கொள்வதில் மக்களின் நல்வாழ்வை வலியுறுத்தும் மடானி மலேசியாவின் கொள்கையின் ஒரு பகுதியாக  உள்ளது.

இதனால் அமைச்சு இதுபோன்ற பல முயற்சிகளை ஆதரிக்கிறது.

மேலும் உள்ளூர் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருந்த சிறு வணிகங்களின் உயிர்வாழ்வைப் பாதிக்காமல் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சமநிலையான அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறு வணிகர்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்த அமைச்சு தொடர்ந்து பல்வேறு வகையான ஆதரவை வழங்கி வருகிறது.

இதில் தொழில்முனைவோர்களிடையே இலக்கவியல் மயமாக்கல் தழுவலை மேம்படுத்துதல், ஒரு மாவட்டம் ஒரு தொழில் திட்டத்தின் கீழ் பொருத்துதல் மூலம் வணிக நெட்வொர்க்குகளை விரிவுபடுத்தப்படுகிறது.

மேலும் தொழில் முனைவோர் திட்டங்கள் மூலம்  ஊடா ஹோல்டிங்ஸ் மூலம் மரி மாட் முயற்சியை செயல்படுத்துவதும் இதில் அடங்கும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset