நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுலின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதுதான் முக்கியம்: தாயார்

ஷாஆலம்:

சம்சுல் ஹரிசின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதுதான் முக்கியம்.

சம்சுலின் தாயார் உம்மு ஹைமான் பீ தௌலத்குன் இதனை கூறினார்.

ஸ்கூடாய் மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 28 அன்று ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை பயிற்சியாளர் சம்சஸ் ஹரிஸ் காலமானார்.

இந்நிலையில் அவரின் கல்லறையை மீண்டும் தோண்ட ஷாஆலம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து குறைந்த பட்சம் மறைந்த சம்சுல் ஹரிஸ் ஷம்சுதீனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை நாம் அறிவோம்.

அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திப்பதற்கு முன்பு அதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் கல்லறையை தோண்டி எடுத்து, தனது மூத்த மகனின் இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்துவதற்கான தனது விண்ணப்பத்தை இன்று நீதிமன்றம் அங்கீகரித்ததை அடுத்து, தனது நன்றியை அவர் தெரிவித்தார்.

நான் எதிர்பார்ப்பது மிகவும் வெளிப்படையான,  துல்லியமான பிரேத பரிசோதனை முடிவு.

அதைத் தொடர்ந்து எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்கும் வகையில் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படும் வெளிப்படையான விசாரணை என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset