
செய்திகள் மலேசியா
நிதி ஒதுக்கீட்டில் இன விவகாரத்தை எழுப்ப வேண்டாம்: பிரதமர்
கோலாலம்பூர்:
நிதி ஒதுக்கீட்டில் இன விவகாரத்தை எழுப்ப வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
13ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் அனைத்து மேம்பாடுகளும் நியாயமாகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் அது ஒரு தரப்பு அல்லது இனம் பெறும் ஒதுக்கீட்டின் அளவு சர்ச்சைக்குரியதாக இருக்கக்கூடாது.
நேற்று மேலவையில் பதிமூன்றாவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்த டத்தோஸ்ரீ அன்வார்,
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா, சரவாக்கின் பூர்வீக மக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்வதில் மதானி அரசாங்கம் எப்போதும் உறுதியாக உள்ளது.
இந்த மாதிரியான சர்ச்சைகள் எனக்குப் பிடிக்கவில்லை, ஏனென்றால் அது மலாய்க்காரர்கள் திருப்தியடைந்து விட்டார்கள் என்ற தோற்றத்தை அளிக்கிறது.
இந்தியர்கள் அல்லது சீனர்களும் அப்படித்தான்.
எனவே, ஒரு தரப்பு அதிக சலுகைகளைப் பெற்றால் சண்டையிடாதீர்கள். அது இனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, தேவையை அடிப்படையாகக் கொண்டது.
இந்திய மக்களின் நலனுக்காக நீங்கள் கேட்க விரும்பினால், தொடருங்கள். இந்த நாட்டில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினர்.
ஏழைகளில் பெரும்பாலோரும் மலாய்க்காரர்கள்தான். அதனால்தான் நாம் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 7:32 pm
செப் 5இல் தலைநகரில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மீலாதுன் நபி ஊர்வலம்
August 26, 2025, 1:57 pm
புரூணை சுல்தானுக்கு இஸ்தானா நெகாராவில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது
August 26, 2025, 1:25 pm
சம்சுலின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதுதான் முக்கியம்: தாயார்
August 26, 2025, 1:19 pm
30 போயிங் விமானங்களை வாங்க மாஸ் மீது எந்த அழுத்தமும் இல்லை
August 26, 2025, 1:17 pm
இந்தியர்களின் நலன், உரிமைக்காக மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும்: டத்தோ நெல்சன்
August 26, 2025, 12:50 pm
பலாப்ஸ் பயிற்சியாளர் சம்சுல் ஹரிசின் கல்லறையை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவு
August 26, 2025, 12:46 pm
விபத்தில் சிக்கிய உடன் பிறப்புகளுக்கு மலிவு விலை வீடு: டத்தோஸ்ரீ ராஜூ பெற்றுத் தந்தார்
August 26, 2025, 11:45 am