நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களின் நலன், உரிமைக்காக  மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும்: டத்தோ நெல்சன்

கோலத் திரெங்கானு:

மலேசிய இந்தியர்களின் நலன், உரிமைக்காக மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும்.

அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் இதனை கூறினார்.

திரெங்கானு மாநில மஇகா 79ஆவது ஆண்டு பேராளர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சார்பாக கலந்து கொண்டு பேசிய டத்தோ நெல்சன், மலேசிய இந்தியர்களின் நலனுக்காக மஇகா எப்போதுமே குரல் கொடுத்து வருகிறது.

தற்போது எந்தவொரு பதவியும் இல்லாத பட்சத்திலும் மஇகா தனது மக்கள் சேவையை தொடர்ந்து வருகிறது.

அதே வேளையில் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் மஇகாவுக்கு ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆக அவர்களுக்கு நான் தொடர்ந்து துணையாக இருப்போம் என்று டத்தோ நெல்சன் கூறினார்.

இதனிடையே இக்கூட்டத்தில் மாநில மஇகாவின் மூத்த தலைவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

அதே வேளையில் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும் சிறப்பிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset