நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பலாப்ஸ் பயிற்சியாளர் சம்சுல் ஹரிசின் கல்லறையை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவு

ஷாஆலம்:

பலாப்ஸ் பயிற்சியாளர் சம்சுல் ஹரிசின் கல்லறையை மீண்டும் தோண்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்கூடாய் யூடிஎம் பலாப்ஸ் பயிற்சியாளர் ஹரிஸ் சம்சுல் அண்மையில் திடீரென காலமானார்.

அவரின் உடல் செமினியில் உள்ள கம்போங் ரிஞ்சிங் உலு இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரின் கல்லறையை மீண்டும் தோண்ட  ஷாஆலம் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குர்சரண் சிங் ப்ரீத், சம்சுல் ஹரிஸின் தாயார் உம்மு ஹைமான் பீ தௌலத்குன் விண்ணப்பத்தை ஏற்று இந்த தீர்ப்பளித்தார்.

முதல் பிரதிவாதியான போலிஸ் தலைவர் அல்லது அவரது அதிகாரி, உம்மு ஹைமான் பீயின் மூத்த மகனின் உடலை தோண்டி எடுத்து இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தும் செயல்முறையை மேற்பார்வையிடுவார் என்று பூபிந்தர் சிங் கூறினார்.

முதல் பிரதிவாதி தேவைப்பட்டால், வேறு எந்த தொடர்புடைய தரப்பினரிடமிருந்தும் உதவி பெறலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset