நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகடிவதை வழக்கில் 6 பேர் மீதான தடுப்புக் காவல் முடிவடைகிறது: அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக போலிஸ் காத்திருக்கிறது

பாசிர் மாஸ்:

பகடிவதை வழக்கில் கைதான 6 பேர் மீதான தடுப்புக் காவல் இன்றுடன் முடிவடைகிறது.

இனி அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக போலிஸ் காத்திருக்கிறது என்று பாசிர் மாஸ் போலிஸ் தலைவர் காமா அசுரல் முகமது கூறினார்.

கடந்த வாரம் பாசிர் மாஸில் உள்ள ஒரு பள்ளியில் படிவம் 3 மாணவன் பகிடிவதைக்கு இலக்கானான்.

இந்த வழக்கில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆறு படிவம் 4 மாணவர்கள் இன்று போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தடுப்புக் காவல் காலம் முடிந்ததும், வழக்குத் தொடரப்பட்டவரின் மேலதிக அறிவுறுத்தல்கள் நிலுவையில் உள்ளதால்  அவர்கள் விடுவிக்கப்பட்டனர்  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset