நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிபிகேஎல் அதிகாரிகள் கைது; எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும்: ஜலேஹா

கோலாலம்பூர்:

டிபிகேஎல் அதிகாரிகள் கைது தொடர்பில் எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா கூறினார்.

எம்ஏசிசி நேற்று டிபிகேஎல்லின் மூத்த ஜூசா பி தர அதிகாரி கைது செய்தது.

இதை தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் முழுமையாக ஒத்துழைக்க கூட்டரசுப் பிரதேச அமைச்சு, கோலாலம்பூர் மாநகர் மன்றம் தயாராக உள்ளன.

யாருடைய தவறான நடத்தைக்கும் தனது கட்சி சமரசம் செய்யாது.

மேலும் இந்த கைது குறித்து செய்தி அறிக்கைகளிலிருந்து நான் அறிந்தேன். 

அது உண்மையாக இருந்தால், விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு முழுமையாக இடம் கொடுப்போம், ஒத்துழைப்போம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset